கியூட் குறும்புகள்!

Posted by மௌனமான நேரம் Wednesday, 28 April 2010 0 comments


என் குழந்தையின் கேள்விகளும் பதில்களும்...

*ஒரு நாள் எங்கள் திருமண போட்டோவை பார்த்து விட்டு அழ ஆரம்பித்து விட்டாள். சமாதானம் செய்து
நான் : என்னடா ஆச்சி?
அவள்: உன் கல்யாணத்துக்கு நீ என்னை ஒரு போட்டோ கூட எடுக்கலை .
நான்: அப்போ நீ இல்லைடா.
அவள்: அப்போ நீங்க ரெண்டு பெரும் நான் இல்லாமலே கல்யாணம் பண்ணிட்டீங்களா?
நான்: !"£$%
(கல்யாணம் பண்ணினதால தாண்டிம்மா நீயே வந்தே!!)
-----------------------------------------------
*சாப்பாடு கொடுத்து ரொம்ப நேரம் ஆகியும் சாப்பிடவே இல்லை. இரண்டு தடவை சொல்லி பார்த்தேன். அப்படியும் விளையாடி கொண்டே இருந்தாள். என்க்கு கோவம் வந்துவிட்டது.
நான்: (கோபமாக) உனக்கு எதனை தடவை சாப்பிடுன்னு சொன்னேன் ?
அவள்: 2 டைம்ஸ்.
நான்: (சிரிப்பை அடக்கிக்கொண்டு) ஓகே. இன்னும் எதனை தடவை சொல்லணும்.
அவள்: 1 டைம்.
-----------------------------------------------------
*ஒரு நாள் என்னை ஆவலுடன் விளையாட கூப்பிட்டாள்.
நான் :சரி என்ன விளையாடலாம் .
அவள்: நீங்க ரெண்டு பெரும் டாடி மம்மி யா நடிங்க. நான் பேபி யா நடிக்கறேன்.
நாங்கள்: !"£$%..
---------------------------------------------------

இரவில் தூங்க போகும் முன்பு தீவிர யோசனையில் இருந்தாள்.
நான்: என்ன யோசிக்கறே?
அவள்: நைட் என்ன ட்ரீம் பண்ணலாம்னு யோசிக்கறேன். பர்பி... வின்னி தி பூ ,டோற... நிறைய இருக்கு chose பண்ணவே முடியலை...

-----------------------------------------------------

காலையில் எழுப்பினேன்...
நான் : ரொம்ப லேட் ஆச்சி எழுந்திரு...
அவள்: நான் இன்னும் ட்ரீம் முடிக்கலே. முடிச்சிட்டு எழும்பறேன் .
:)
-------------------------------------------------------

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கு, டெலிபோன் இணைப்பு, காப்பீடு உள்ளிட்ட அனைத்து முழுமையான தகவல்களையும் ஒன்று திரட்டி, விரல் நுனியில் வைத்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தபின், இந்த திட்டம் செயல்படுத்தப்படும். உள்நாட்டு பாதுகாப்பின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருவதை அடுத்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாட்டின் ஒவ்வொரு குடிமகனைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரிப்பதற்காக, நந்தன் நிலேகனி தலைமையில் சிறப்பு அடையாள எண் அட்டை வழங்கும் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தால் வழங்கப்படும் அட்டையில், ஒவ்வொரு குடிமகனின் பிறந்த தேதி, அவரின் கல்வித் தகுதி உட்பட அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நவீன தொழில் நுட்ப வசதிகளை, தங்களின் சதித் திட்டங்களுக்கு பயங்கரவாதிகள் பயன்படுத்துவதால், சிறப்பு அடையாள அட்டை வழங்கும் ஆணையத்தால் திரட்டப்படும் தகவல்கள், உள்நாட்டு பாதுகாப்புக்கு போதுமானதாக இருக்காது என, அரசு கருதுகிறது. இதன் காரணமாக, பொதுமக்களின் வங்கி கணக்கு, காப்பீடு, நிலம், டெலிபோன் இணைப்பு, வீடு உள்ளிட்ட முக்கிய தகவல்களை திரட்ட, அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் ஏஜன்சிகள் மூலம் இந்த தகவல்கள் திரட்டப்பட்டு, தேசிய புலனாய்வு தொகுப்பின் கட்டுப் பாட்டில் வைக்கப்படும். புலனாய்வு அமைப்பு, ரா, ராணுவ புலனாய்வு,வருவாய் புலனாய்வு, தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட 11 ஏஜன்சிகளுக்கு மட்டுமே, இந்த தகவல்களை பெறும் வசதி கிடைக்கும். இந்த தகவல்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து, மேற்கண்ட ஏஜன்சிகள், தங்களுக்குள் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொள்ளும். ஒருவரைப் பற்றிய தகவல்கள் வேண்டுமெனில், அவரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் உடனடியாக பெறுவதற்கு வசதியாக, இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக செயல்படும் ஏஜன்சிகளுக்கு இந்த தகவல்கள் உபயோகமாக இருக்கும்.

இதுபற்றிய ரகசியங்கள் வெளியில் கசிந்து விடாமல் இருப்பதற்கு, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மகிந்திரா சிறப்பு பணிகள் குழுமத்தில் பணியாற்றிய கேப்டன் ரகுராமன், இந்த பணிகளுக்கான தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குள், அனைத்து விவரங்களும் திரட்டப்பட்டு, தேசிய புலனாய்வு தொகுப்புடன் அவை இணைக்கப்படும். ரயில்வே, ஏர்- இந்தியா, வருமான வரித்துறை, மாநில போலீசார் உள்ளிட்ட அரசு துறைகளும், வங்கி, காப்பீடு, தொலைத் தொடர்பு, உள்ளிட்ட தனியார் துறைகளும், தகவல் களை அளிக்கும் விஷயத்தில் இணைந்து செயல்படும்.

இத்திட்டம் அமலுக்கு வந்தால், குடிமக்களில் யாராவது ஒருவர் புதிதாக நிலம் வாங்கினாலோ, வங்கி கணக்கு துவங்கினாலோ அல்லது தங்கள் பெயரில் காப்பீடு எடுத்தாலோ, அதுபற்றிய விவரங்கள் அடுத்த நிமிடமே, அரசுக்கு தெரிந்து, கண்காணிப்புக்கு வந்து விடும். மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக, இத்திட்டம் காத்திருக்கிறது. ஒப்புதல் கிடைத்தபின், இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.


நன்றி தினமலர்!

இலவச உதவி!!

Posted by மௌனமான நேரம் Wednesday, 3 February 2010 0 comments

இலவச உதவி!!

ஒரு தனியார் நிறுவனத்துக்கு வந்த இ-மெயில் செய்தியை உங்கள் பார்வைக்கு....


ஜேர்மன் நாட்டு மருத்துவ குழு ஒன்று கொடைக்கானலுக்கு வருகை தருகிறது. இவர்கள் பாசம் மருத்துவமனையுடன் சேர்ந்து தீ விபத்து அல்லது பிறவி குறைபாடு (காது, மூக்கு மற்றும் தொண்டை) உள்ளவர்களுக்கு என ஒரு இலவச மருத்துவ முகாம் நடத்த உள்ளது. இதில் பிளாஸ்டிக் சர்ஜெரியும் உள்ளடக்கம்...

இது ஒரு முற்றிலும் இலவசம்!!!

இடம்: பாசம் மருத்துவமனை, கொடைக்கானல்
தேதி: 23-மார்ச்-2010 முதல் 04-ஏப்ரல்-2010
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி: 04542-240668, 245732

இ-மெயில்: pasam.vision@gmail.com

இதன் மூலம் ஒருவரேனும் பயன் அடைந்தால், எங்களுக்கு மகிழ்ச்சி!!

http://www.thehindu.com/2009/01/11/stories/2009011151570300.htm

Corn Flakes விலை உயர்வு!!

Posted by மௌனமான நேரம் Sunday, 31 January 2010 0 comments

காலை உணவுக்கு பயன்படுத்தப்படும் கெலாக்ஸ் கார்ன்பிளேக்சின் விலை அதிகரிக்க உள்ளது. இந்தியாவில் காலை உணவு தயாரிக்கும் பெரிய நிறுவனமான, கெலாக் இந்தியா நிறுவனம், கோதுமை, சோளம் மற்றும் கோகோ போன்றவற்றை மூலப்பொருட்களின் விலை உயர்வால், தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது.
இதுகுறித்து, கெலாக் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அனுபம் தத்தா கூறுகையில், 'ஐந்தாண்டுகளாக, எங்கள் தயாரிப்புகளின் விலையை அதிகரிக்காமல் சமாளித்தோம். அதே விலையையே தொடர விரும்பினோம். ஆனால், மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், தயாரிப்புகளின் விலையை சிறிது அதிகரிக்க வேண்டி உள்ளது' என்றார்.

மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், துவரம்பருப்பு விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் குவிண்டாலுக்கு 1,200 ரூபாய் வரை சரிவு ஏற்பட்டது, வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 'விலை மேலும் சரியும்' என்று வியாபாரிகள் மத்தியில் தகவல் பரவி வருவதால், பருப்பு இருப்பு வைத்துள்ள வியாபாரிகள் கிலியடைந்துள்ளனர்.

இந்திய அளவில் 2008 டிசம்பர் முதல் துவரம் பருப்பு விலையில் கடும் உயர்வு ஏற்பட்டது. உச்சகட்டமாக, 2009 டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் கிலோ 88 ரூபாயாக விலை உயர்ந்தது. விரைவில் 100 ரூபாயாக உயரும் என்ற கருத்தும், அப்போது வியாபாரிகள் மத்தியில் நிலவியது. பருப்பு விலை, நேற்று குவிண்டாலுக்கு 1,200 ரூபாய் சரிவு ஏற்பட்டு குவிண்டால் 5,800 ரூபாய்க்கும், கிலோ 58 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. சில்லரை விலையில் ஏற்பட்ட சரிவை தொடர்ந்து மொத்த விலையிலும் சரிவு ஏற்படுவது தான் வழக்கம். ஆனால், வியாபாரிகள் கடந்த மாதமே அதிக விலை கொடுத்து பருப்பை விற்பனைக்காக வாங்கியதால் பருப்பு விலையை குறைக்க முன்வரவில்லை . 'சில்லரை கடைகளில் இன்று முதல் விலை குறைப்பு செய்யப்படும்' என வியாபாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை காரணமாக, வடமாநில வியாபாரிகள் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த பருப்புகளையும் விற்பனைக்கு கொண்டு வரத்துவங்கியுள்ளனர்.

தூங்கா நகரம்!

Posted by மௌனமான நேரம் 0 comments

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி தயாரிக்கும் 2வது படம் தூங்கா நகரம். இப்படத்தின் சூட்டிங்கை மதுரையில் அழகிரி தொடங்கி வைத்தார். விழாவில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு துரை தயாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதன் பின்னர் அவர் தூங்கா நகரம் படம் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். வாரணம் ஆயிரம் படத்தை வெளியிட எனக்கு வாய்ப்பு கிடைத்ததால்தான் நான் தொடர்ந்து சினிமாத்துறையில் ஈடுபட்டு வருகிறேன். தூங்கா நகரம் படத்தில் 4 கதாநாயகர்கள். பசங்க படத்தில் நடித்த விமல், ரேனிகுண்டா நிஷாந்த், நா‌டோடிகள் பரணி, படத்தை இயக்கும் கவுரவ் ஆகியோர் நாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த படம் வெளியூரில் இருந்து மதுரை வந்து வாழ்க்கை நடத்தும் வாலிபர்களின் கதை. மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் சூட்டிங்கை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். மே மாதத்தில் தூங்கா நகரம் திரைக்கு வரும், என்று துரை தயாநிதி கூறினார்.

Widget By Devils Workshop