எனக்கு பள்ளிகூடத்தில் படிக்கும் போது நிறையா சந்தேகம் வரும். அதுவும் geographhy லே ரொம்ப நிறையா வரும். அப்போ அப்போ teachers கூட திணருவதுண்டு. ஒரு டீச்சர் கிளாஸ் உள்ள நுழையும் போதே 'இன்னக்கி இந்த chapter கண்டிப்பா முடிக்கணும். No questions please' ன்னு சொல்லிட்டு ஆரம்பிப்பாங்க. ஆனாலும் நமக்கு கேள்விகள் மட்டும் கண்ணு மண்ணு இல்லாம தோணிகிட்டே இருக்கும்.. இத்தனை வருசத்துக்கு அப்பறம் அதுலே பல கேள்விக்கு பதில் கிடைச்சிருக்கு . சிலதுக்கு இன்னும் கிடைக்கலே :(அந்த லூசுத்தனமான கேள்விகளில் சில இதோ:-
1. உலகம் உருண்டை வடிவமானது. சரி. அப்போ உருண்டையின் மேலே இருப்பவர்கள் நேராக நிற்கும் பொது கீழே இருப்பவர்கள் தலை கீழாக நிற்க மாட்டார்கள? :( புவியீர்ப்பு விசையினால் தான்.
2. உலகில் எல்லா இடத்திலும் ஒரே நேரம் மழையும் வெயிலும் வருவதில்லை. அப்போ ஏதேனும் ஒரு இடத்தில் இருந்து பார்த்தால் இடது பக்கம் மழையும் வலது பக்கம் வெயிலும் இருக்குமா? :)
3.உலகம் சுற்றும்போது நில பரப்பும் நீர் பரப்பும் எப்படி இடம் மாறாமல் அப்படியே அதே இடத்தில் இருக்கிறது?
4. உலகில் சில நாடுகளில் , 'நீண்ட இரவு, நீண்ட பகல், குறுகிய இரவு, குறுகிய பகல்' இதெல்லாம் என்ன ?
இப்படி எல்லாம் கேள்வி கேட்டா என்ன பாத்து பயப்பட மாட்டாங்களா என்ன :)











0 பின்னூட்டங்கள்