யாரவது முட்டாள்தனமாக ஏதாவது செய்துவிட்டால் ... 'மூளை இருக்கா??' என்று கேட்பதை கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு பகுதி மூளையே இல்லாமல் அறிவாளியாக ஒரு பெண் இருக்கிறாள்.
ஜெர்மனி இல், ஒரு பத்து வயது பெண் பிறக்கும்போதே மூளையின் வலது பாகம் இல்லாமலே பிறந்தாள். ஏதாவது ஒரு மருத்துவ காரணத்திற்காக/சிகிச்சைக்காக மூளையின் ஒரு பகுதி அகர்றபட்டால், அந்த நோயாளிக்கு அந்த மூளை பகுதி சம்பந்தப்பட்ட பாகங்கள் சரிவர இயங்காது... உதாரணமாக அந்த மூளை பகுதி சார்ந்த கண். இது மருத்துவ உண்மை.
ஆனால் இந்த பெண்ணுக்கோ, அப்படி இல்லாமல் ஒரே கண்ணில் இரு கண்ணின் பார்வையும் தெரிகிறது. உடலின் மற்ற எல்லா இயக்கங்களும் சராசரி மனிதனை போலவே இருக்கிறது.
மருத்துவர்கள், இது ஒரு மருத்துவ அதிசயம் என்கிறார்கள். மூளையின் ஒரு பாகமே மற்ற பாத்தின் இயக்கங்களையும் சேர்த்து செய்கின்றது என்கின்றனர்.
இந்த பெண், நல்ல ஆரோக்கியத்துடன், புத்திசாலியாக, மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்கிறாள்.












இயற்கையின் பல்வேறு ஆச்சர்யங்களில் இதுவும் ஒன்று........
வருகைக்கு நன்றி செந்தழல் ரவி!
ரொம்ப உண்மைங்க!