உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஃபோபர்ஸ் பத்திரிகை இதழ் வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டை ஆளும் அதிகாரத்தை வைத்திருத்தல், மக்களிடையே பிரபலமாக இருத்தல், அரசியலில் தலைமை கொண்டிருத்தல், அதிகார நிலை மற்றும் மிகப் பெரிய நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகளில் செல்வாக்குப் பெற்றிருத்தல் போன்றவற்றை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்க பட்டுள்ளது.
அதன்படி முதல் மூன்று இடத்தின் விவரம் வருமாறு:
முதலிடம்: ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்சலோ மார்கல் (தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்)
இரண்டாம் இடம்: ஃபெடரல் டெபாசிட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் ஷெய்லா பாயிர்.
மூன்றாவது இடம்: அமெரிக்கா வாழ் இந்தியரும், பெப்சிகோ நிறுவன தலைமை அதிகாரியுமான இந்திரா நூயி.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி 13-வது இடத்திலும், ஐசிஐசிஐ வங்கியின் தலைமை அதிகாரி சாந்தா கோச்சார் 20-வது இடத்திலும், பயோகான் நிறுவன தலைவர் கிரண் மசூம்தார் 91-வது இடத்திலும் உள்ளனர்.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 28-வது இடமும், அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செலி ஒபாமா 44-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இப்பட்டியலில் பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் 42-வது இடத்தில் உள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த 3 பெண்கள் இம்முறை இப்பபட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.












Good site...but a lot of advetisements.
Thanks for the comments. The Site is under testing now. We'll consider your comments and will do the required actions.
Once again thanks for visiting and visit again!!